திட்டமிட்ட குற்றங்கள் புரியும் 'யகா சம்பத்' கைது!

திட்டமிட்ட குற்றங்கள் புரியும் 'யகா சம்பத்' கைது!

திட்டமிட்ட குற்றங்களை புரியும் குழு உறுப்பினராக கருதப்படும் 'யகா சம்பத்' என அழைக்கப்படும் ரீரிகம ராஜபக்ஷ கெதர ஆனந்த சில்வா ஹொரோயினுடன் பத்தரமுல்லையில் வைத்து இன்று (22) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாதாள உலகக்குழு உறுப்பினராக கருத்தப்படும் 'கராடே தம்மிக' என்ற நபரின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து ரிவோல்வர் ஒன்றும், வாள்கள் இரண்டும், கத்தி ஒன்றும், இரும்பு பொல்லுகள் இரண்டும் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள் இரண்டும் மற்றும் 4 கிராம் 300 மில்லிகிராம் ஹேரோயினும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் நாளைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post