அரச ஊழியர்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை!

அரச ஊழியர்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை!

அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் அதனை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அலகக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்கள் தங்களது பெயர்களில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில் அரச மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் தங்கள் பெயர்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post