மனோ கணேசனுக்கு கொலை அச்சுறுத்தல்?

மனோ கணேசனுக்கு கொலை அச்சுறுத்தல்?

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

தன்னை கொல்ல நடந்த சதி தொடர்பாக புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அது குறித்து மேலதிகமாக எதையும் இப்போதைக்கு பேசவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கொலை அச்சுறுத்தல் இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக எந்த பாதுகாப்பையும் கோரவில்லையென்றும், தனது தொண்டர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post