குளவி கொட்டுக்கு ஆளான 70 வயது நபர்; உடம்பின் உள்ளே இருந்து 11 குளவி மீட்பு!

குளவி கொட்டுக்கு ஆளான 70 வயது நபர்; உடம்பின் உள்ளே இருந்து 11 குளவி மீட்பு!


நாரங்கல - கலஉட ஆதார வைத்தியசாலையில் இன்று (24) குளவி கொட்டுக்கு இலக்கான 70 வயது வயோதிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இன்று (24) மாலை கலஉட ஆதார வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்டவர் அஸ்பாரகஸ் இலைகளை எடுக்க கலஉட கிராமத்தில் உள்ள ஒரு காட்டுக்குச் சென்று குளவி கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வயோதிபரின் மூக்கிலிருந்து 11 குளவிகளை இறந்த நிலையில் வைத்தியர்கள் மீட்டுள்ளனர்.

சுமார் 2 மணி நேர சிகிச்சையின் பின் வயோதிபரின் உடலில் இருந்து ஆயிரக்கணக்கான நச்சுக்களை அகற்றப்பட்டு குறித்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post