
ஆண் குழந்தையொன்றை பிரசவித்த 34 வயது பெண்ணொருவர் உயிரிழந்ததை தொடர்ந்தே வைத்தியசாலையின் முன்பாக குழப்பநிலை உருவானது.
குறிப்பிட்ட பெண்ணின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை தொடர்ந்து சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரின் மரணம் குறித்து குடும்பத்தவர்களும் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பநிலை தோன்றியதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தலையிட்டனர்.
வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமை ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.