அமெரிக்க தொண்டார் குழு பயங்கரவாதி ஈரானில் கைது!

அமெரிக்க தொண்டார் குழு பயங்கரவாதி ஈரானில் கைது!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவொன்றின் தலைவரை தான் கைது செய்துள்ளதாக ஈரான் இன்று (01) தெரிவித்துள்ளது.

ஜம்ஷித் ஷர்மஹ்த் (Jamshid Sharmahd)  எனும் இவர் 2008 ஆம் ஆண்டு ஈரானின் ஷிராஸ் எனும் நகரில் பள்ளிவாசலில் 14 பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைவதற்கு காரணமான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

ஈரானில் ஆயுத மற்றும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இவர் எனவும் தற்போது அவர் தற்போது வலிமையான கரங்களில் உள்ளார் எனவும் ஈரானிய புலனாய்வுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தொண்டார்  (Tondar ) எனும் குழுவின் தலைவரான ஜம்ஷித் ஷர்மஹ்த் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு எப்போது கைது செய்யப்பட்டார் போன்ற தகவல்களை ஈரான் தெரிவிக்கவில்லை.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post