
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்போது உலகின் பெரும்பாலன நாடுகளில் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில், பல லட்சம் மக்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்து விட்டதாக உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
"கமலேயா நிறுவனம் (Gamaleya Institute) உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.
கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் குறித்த தடுப்பூசியை பயன்படுத்த எதிர்வரும் ஒக்டோபரில் திட்டமிட்டுள்ளொம்." என தெரிவித்தார்.