
ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
கொரோனா தொற்று தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை இல்லை.
கொரோனா தொற்று தம்மை தாக்காது என அசட்டையீனமாக இளைஞர்கள் செயற்படுகின்றனர்.
ஆனால் இளைஞர்களே அதிளவில் கொரோனா தொற்றுக்குள்ளாவதோடு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பில் இளைஞர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
இதேவேளை உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என டெட்ரோஸ் அதானோம் மேலும் தெரிவித்தார்.