பாடசாலைகளுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அனுமதி!

பாடசாலைகளுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தடைப்பட்டிருந்த பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சுக்கள் அனுமதி வழங்கியுள்ளன.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

சுகாதார தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு அமைச்சுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த காலகட்டத்தில் முன்னெடுக்க கூடிய விளையாட்டு போட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விளையாட்டு போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post