மைத்திரியிடம் 9 மணிநேர வாக்குமூலம்; சற்றுமுன் வெளியேறிய விசாரணை குழு!

மைத்திரியிடம் 9 மணிநேர வாக்குமூலம்; சற்றுமுன் வெளியேறிய விசாரணை குழு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் இன்று காலை வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அங்கு சென்றிருந்தனர்.

அதனடிப்படையில் இன்று (26) அவரிடம் சுமார் 9 மணிநேர வாக்குமூலம் பெற்ற அவர்கள் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் இன்று காலை அங்கு சென்றிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கடந்த 21ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தனக்கு குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாக முடியாது எனவும் கொழும்பில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வந்து வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

அதற்கமைய ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் இன்று காலை அவரின் இல்லத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post