இ.போ சபைக்கு பேருந்துகள் இறக்குமதியை இடைநிறுத்த நடவடிக்கை!

இ.போ சபைக்கு பேருந்துகள் இறக்குமதியை இடைநிறுத்த நடவடிக்கை!

இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை எதிர்காலத்தில் நிறுத்தப்படும் என போக்குவரத்துத் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஏக்கல பகுதியில் அமைந்துள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்காலத்தில் பேருந்துகளை இறக்குமதி செய்யாது, செஸி மற்றும் எஞ்சின் போன்வற்றை மாத்திரம் இறக்குமதி செய்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான பேருந்துகளை நாட்டிலேயே தயாரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்தொன்றை தயாரிப்பதற்கு லக்திவ பொறியியல் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு சுமார் நான்கு மாதங்களே தேவைப்படுவதாக போக்குவரத்துத் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் கீழ் செயற்படும் அரச நிறுவனமான லக்திவ பொறியியல் நிறுவனத்தின் ஊடாக, தற்போது பழைய பேருந்துகளை புதிதாக உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post