வசந்த சொய்சா கொலை; பிரதான சந்தேக நபர் SF. லொக்கா சுட்டுக் கொலை!

வசந்த சொய்சா கொலை; பிரதான சந்தேக நபர் SF. லொக்கா சுட்டுக் கொலை!

வசந்த சொய்சா கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் இரான் ரணசிங்க எனப்படும் SF. லொக்கா சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

SF. லொக்கா மற்றும் அவரது காதலி காரில் பயணித்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டில் SF. லொக்காவின் காதலிக்கு எவ்வித ஆபத்துக்கும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதாள உலக பிரதான SF. லொக்கா தனது 32 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

T-56 ரக துப்பாக்கியால் குறித்த தாக்குதல் மேட்கொள்ளப்பட்டு, எட்டு தோட்டாக்கள் பாய்ச்சப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post