பெய்ரூட் வெடி விபத்தால் 3 லட்சம் பேர்களின் வீடுகள் இழப்பு! 100க்கும் மேல் உயிர் பலி!

பெய்ரூட் வெடி விபத்தால் 3 லட்சம் பேர்களின் வீடுகள் இழப்பு! 100க்கும் மேல் உயிர் பலி!

நேற்றிரவு லெபனான் - பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்ததாக பெய்ரூட் ஆளுநர் மார்வான் அப்போத் தெரிவித்தார்.

லெபனான் அதிபர் மைக்கேல் அவோன் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று (05) ஏற்பாடு செய்தார். நாட்டில் 2 வார காலத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட் துறைமுக கிடங்கில் நடந்த வெடி விபத்தில் 2,750 டன்கள் அளவுக்கு அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததால் லெபனானில் நடந்த போர்களை விட அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 100 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 4,000 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சேதங்களில் பெய்ரூட் மீண்டுவர பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் நீண்ட காலமாக அமைதியின்மை நிலவுகிறது. அண்டை நாடுகளான சிரியா மற்றும் இஸ்ரேல் இதற்கு காரணமாக உள்ளன. 1985 முதல் 2000 வரை லெபனானில் ஏற்பட்ட போர், 2007, ஜூலை மாதம் நடந்த போர், 2007-08 இடையில் ஏற்பட்ட கலவரம் என தொடர்ச்சியாக பல்வேறு சோதனை காலகட்டங்களை அந்நாடு சந்தித்தது. கடந்த சில வருடங்களாக மட்டும் அந்த நாட்டில் அமைதி நிலவி வந்தது. ஆனால், 50 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த போரில் ஏற்படாத துயரம் ஒரேயொரு வெடி விபத்தால் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நகரமே 40 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூடர் ஆளுநர் மார்வன் அப்போத் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இது வரை 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளார்கள். சேத மதிப்பு 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். பிரதமர் ஹஸ்ஸான் தியாப், 'அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம், உணவு போன்றவற்றை வழங்க பணியாற்றி வருகிறார்கள். வெடி விபத்து சம்பவத்தால் புதன்கிழமை நாடு முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் பெய்ரூட் செல்ல உள்ளார். இரு விமானங்களில் பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த மீட்புப்படையினரும் பெய்ரூட் செல்ல உள்ளனர். முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய மேக்ரான், ' லெபனான் அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளேன். லெபனான் பிரான்ஸ் நாட்டுடன் பொருளாதார ரீதியாக நீண்டகால நட்பு நாடாக உள்ளது.' இவ்வாறு தெரிவித்தார்

இந்நிலையில் ஐரோப்பிய கமிஷன் 100க்கும் மேற்பட்டவர்கள் தீயணைப்பு படையினரை மீட்புபணிக்காக அனுப்ப உள்ளது. செக் குடியரசு, ஜெர்மனி, கிரீஸ், போலந்து, நெதர்லேண்ட் போன்ற நாடுகளும் இருந்தும் பெய்ரூட் சம்பவத்தில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post