அரசியல் அமைப்பு மாற்றத்தை விட அரசியல்வாதிகளிடமே மாற்றம் தேவை!

அரசியலமைப்பு மாற்றத்தை விட அரசியல்வாதிகளே தங்களை திருத்தியமைத்து கொள்ள  வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசியலமைப்பில் திருத்தம் ஏற்படுத்தப்படுவதால் மாத்திரம் நாடு முன்னேற்றமடையாது.  நாட்டில் இதுவரை காணப்பட்ட அரசியலமைப்பின் ஊடாகவே  சிறந்த வேலைத்திட்டங்களும் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் வாழ்க்கை முறையும் பிரச்சினையின்றி செயற்பட்டது. அரசியலமைப்பில் எந்தத் தவறும் கிடையாது.

அரசியல் தலைமைகளின் தவறு காரணமாகவே நாடு பின்னடைவை சந்திக்கின்றது. எனவே அரசியலமைப்பு மாற்றத்தை விடுத்து அரசியல்வாதிகள் தங்களை திருத்தியமைத்து கொள்ள வேண்டும் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்." என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post