ஆடைகள் இறக்குமதி முற்றாக தடை; ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆடைகள் இறக்குமதி முற்றாக தடை; ஜனாதிபதியின் விசேட அறிக்கை!

வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிக் மற்றும் கைத்தறி நெசவு ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறும் கண்காட்சி ஒன்றை நேற்று பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இறக்குமதி தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. அத்துடன் ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்துள்ளது.

இலங்கையில் எமது தேசியத்தை அடிப்படையாக கொண்ட தேசிய வளங்களை வலுப்படுத்தி அவற்றை பாதுகாத்து எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.

இதடினப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்வதை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேசிய ரீதியில் புதிய ஆடை தொழிற்சாலைகளை அதிகளவில் ஆரம்பிக்க தேவையான சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.