
அக்கட்சியின் செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டமை குறித்து ரதன தேரர் மீது முறைப்பாடு உள்ளது.
இதுகுறித்த விசாரணைக்கு பொலிஸார் நேற்று ரதன தேரரை அவரது விகாரையில் சந்திக்க சென்றனர். எனினும் அவர் அங்கு இருக்கவில்லை.
அதனை அடுத்து பொலிஸார் தொலைபேசி ஊடாக அவரை தொடர்பு கொண்டபோது, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு இன்று வருவதாக தேரர் கூறியிருந்தபோதும் விசாரணைக்கு அவர் இன்றும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் 'அபே ஜன பல' கட்சியின் தேசியப்பட்டியல் ஆசன நெருக்கடி தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.