சிறுவர்களுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக புகட்டப்பட வேண்டும். - அமைச்சர் அலி சப்ரி

சிறுவர்களுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக புகட்டப்பட வேண்டும். - அமைச்சர் அலி சப்ரி

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விடயங்களை தீர்ப்பதற்காக என தனியாக நீதிமன்றத்தை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் திரு அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

"சில விடயங்களை நாங்கள் நீண்ட காலமாக மறைக்க முடியாது. சிறுவர் துஷ்பிரயோகத்தின் தாக்கம் வாழ்நாள் முழுவதும் இத்தகைய துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஒருவர் மீது நீடிக்கும். இவை முற்று முழுவதுமாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும், இந்த விடயங்கள் இனி கம்பளத்தின் கீழ் இருக்க முடியாது.

இதற்கு தேவையான வேலைகளைச் செய்ய நாம் சட்டங்களைக் கொண்டு வரவுள்ளோம். இந்த விடயங்களை ஆராய அமைச்சரவை ஒப்புதலுடன் ஒரு தனி நீதிமன்றத்தை அமைப்போம். குழந்தைகள் துஷ்பிரயோகம் எனும் பிரச்சினை அத்தகைய முக்கியத்துவத்தை உடையது.

பெரும்பாலும், இது போன்ற குற்றங்களைச் செய்யும் ஒரு நபர் வழிதவறிச்சென்ற நபராக மட்டுமே இருக்க முடியாது, மாறாக அது குழந்தைகளுக்கு நெருக்கமானவரான, சில சமயங்களில் அது ஒரு ஆசிரியராக, அல்லது அந்தக் குழந்தையின் நம்பிக்கையை வென்ற ஒருவரான ஒருவர் கூட சமயங்களில் குற்றவாளியாக மாறிவிடுவார்.

கடந்த சில மாதங்களாக குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக நிறைய கருத்துக்கள் எம்மிடையே பரிமாறப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான கலந்துரையாடலுக்குப் பிறகு, பாலியல் மற்றும் அது தொடர்பான விடயங்களில் குழந்தைகளுக்கு போதியளவு கல்வி அறிவை புகட்டுவது குறித்து நாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். இந்த விடயங்களை இனி இரகசியங்களாக வைத்திருக்க முடியாது." என தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post