வடமேல் மாகாண மஹாசங்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள கௌரவ மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று நாட்டின் எதிர்கால திட்டங்களை கௌரவ மஹாசங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வடமேல் மாகாணத்தில் காணப்படும் நீர் பிரச்சினை, காட்டு யானைகளின் பிரச்சினை மற்றும் பிற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஆராந்து, மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தெமட்ட மளுவ திக்வெஹெர தலைமை விகாராதிபதி, வடமேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் கௌரவ ரூகவ ஜீனரதன தேரர், வாரியபொல சுமங்கள சிறிவெனே பிரிவேனாதிபதி வடமேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் கௌரவ பேராசிரியர் தும்புல்லே ஸ்ரீ லக்கந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.
மேலும், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில், நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கால்நடை பண்ணை மேம்பாடு மற்றும் பால் கைத்தொழில் துறை அமைச்சர் டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்துக்கொண்டனர்.