போதைப்பொருள் நுகரும் நிலையில் மாணவர்கள் கைது!

போதைப்பொருள் நுகரும் நிலையில் மாணவர்கள் கைது!

school-students-arrested
கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நேற்றய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த மாணவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்த போதைப்பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த 4 பேரும் பாடசாலை மலசல கூடத்திற்குள் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post