
இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேககர இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய அனைத்து பொலிஸ் பிரிவிற்கும் கேமெராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வீடியோ சாட்சிகள் வழங்குவதற்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்களிக்கும் நிலையங்களில் 25,998 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.