மட்டக்களப்பில் சில பகுதிகளில் இன்று மின்தடை!

மட்டக்களப்பில் சில பகுதிகளில் இன்று மின்தடை!

பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக இன்று (29) காலை முதல் மாலை வரை மட்டக்களப்பின் சிலப்பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டக்களப்பு பிரதேச மின்பொறியியலாளர் அலுவலக பிரிவுக்குட்பட்ட மட்டிக்கழி, புன்னைச்சோலை, பாலமீன்மடு, கருவேப்பங்கணி, அமிர்தகழி, திராய்மடு, மாமாங்கம், திருமலை வீதி, மட்டக்களப்பு பொதுச்சந்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள திருத்தவேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post