கள்ளக் காதலியின் மகளை கற்பழித்து கொலை செய்த நபர் கைது!

கள்ளக் காதலியின் மகளை கற்பழித்து கொலை செய்த நபர் கைது!

புத்தளம், ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை கற்பழித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், பலாவி, பெரியகுளம் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சிமியோன் அலோசியஸ் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி ஆசிரிகம பகுதியில் உள்ள தென்னம் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனது தாயாருடன் வசித்து வந்த குறித்த சிறுமி தாயாரின் கள்ள காதலன் என கூறப்படும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை அவரது தாயார் பாம்பு தீண்டியதாக தெரிவித்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post