அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ள சிங்களே அமைப்பின் தேரர்!

அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ள சிங்களே அமைப்பின் தேரர்!

Medille Pagngnaloka Thera
அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

அலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக அலி சப்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அவருக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் தனக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் பஞ்ஞாலோக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எதிராக தான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post