இன்று துபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த 420 பேர்!

இன்று துபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த 420 பேர்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 420 இலங்கையர்கள் இன்று (16) மாலை நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் துபாயில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விசேட விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு திரும்பியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வீட்டுப் பணி பெண்களாக அங்கு பணிபுரிந்துள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post