இலங்கையில் கொரோனா தொற்றாளர்களில் எண்ணிக்கை மேலும் உயர்வு!

இலங்கையில்  சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,893 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த மூவரும் ஓமானில் இருந்து நாடு திரும்பியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் 04 பேர் பூரண குணமடைந்த நிலையில், குணமடைந்த மொத்த எண்ணிக்கை 2,670 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் 212 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post