பல நாட்களாக 16 வயது சிறுவனை நடுக்கடலில் வைத்து சித்தரவதை செய்த மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல நாட்களாக 16 வயது சிறுவனை நடுக்கடலில் வைத்து சித்தரவதை செய்த மூவர் கைது!

மீன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து சித்தரவதை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஸ்ஸ பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மேற்படி சிறுவன், சில வாரங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, ஆகஸ்ட் 12 ஆம் திகதி கரைக்குத் திரும்பினார்.

வீடு திரும்பியதும் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, அந்த இளைஞன் தான் மீன்பிடி குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

சிறுவன் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதனையடுத்து அவரது பெற்றோர் அளித்த முறைப்பாடு மற்றும் சம்பவம் தொடர்பான ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், படகு உரிமையாளர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று (16) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.