
கொரோனாவினால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சிக்கித் தவிக்கும் ஏராளமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு வசதி செய்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே இவ் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் மற்றும் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் விளைவால் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இருமுறை அரசாங்கத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீள் அழைத்துவரும் பணி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள தூதரக பொது அலுவலகம் ஆகியவை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடன் இணைந்து இலங்கைக்கு திரும்ப வர விரும்புவோருக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


