தொழிநுட்பத்துடன் கூடிய மற்றும் இலங்கையர்களை உள்வாங்கப்படாத நாடுகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்!

தொழிநுட்பத்துடன் கூடிய மற்றும் இலங்கையர்களை உள்வாங்கப்படாத நாடுகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்!

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொடர்பான முழுமையான தகவல் களஞ்சியம் ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாரேஹென்பிட்டியவில் உள்ள அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அவ்வாறு முழுமையான தகவல் களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் தொழில் புரிநருக்கு அல்லது அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் தலையீடுகளையும் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

'சம்பிரதாயபூர்வமான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு பதிலாக நவீன தொழினுட்பத்துடன் கூடிய புத்தாக்க தொழிலாளர்களை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்புவதே எமது நோக்கம். இலங்கை தொழிலாளர்களை உள்வாங்காத சில நாடுகளுக்கும் இலங்கையர்களை அனுப்பி வைப்பதும் எமது நோக்கமாக உள்ளது' என தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post