சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் வரை பலி!

சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்; 15 பேர் வரை பலி!

சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில், ஹோட்டலுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான, சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவின் கடற்கரையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிகம் வருகை தரும் 'எலைட் ஹோட்டல்' எனும் இந்த ஹோட்டலின் முன்புறத்தின் பாதுகாப்பு வாயிலை நேற்று முன்தினம் பிற்பகலில் கார் வெடிகுண்டு மூலம், பயங்கரவாதிகள் தகர்த்தனர். பின்னர், துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த நான்கு பயங்கரவாதிகள் அங்கு உணவருந்தியவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், ஹோட்டலை சுற்றி வளைத்தனர்.

இதனால் பிணைக்கைதிகள் 15 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ஹோட்டலுக்குள் அதிரடியாக நுழைந்து நான்கு பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொன்றதுடன் அங்கிருந்த பலரை மீட்டனர்.

இத் தாக்குதலுக்கு அல் - குவைதாவுடன் கூட்டணி வைத்துள்ள சோமாலியாவின் உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான அல்- ஷபாப் பொறுப்பேற்று உள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post