
இந்நிலையில் இன்று (19) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய அவர்களை சென்று சந்தித்தார்.
இதன்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.
அத்துடன் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு மேலதிகமாக 10,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.