அனைத்து தர பாடத்திட்டங்களில் ஏட்படவுள்ள பாரிய மாற்றம்! -கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து தர பாடத்திட்டங்களில் ஏட்படவுள்ள பாரிய மாற்றம்! -கல்வி அமைச்சு

இலங்கையில் சர்வதேச தரத்திற்கு அமைய புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார முறைமை, தொழில் சந்தை ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாவட்ட ரீதியாகப் கல்வித்துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள், வர்த்தகப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

அத்துடன் புதிய பாடத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தற்போதைய கல்வி முறையூடாக மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.