
IPL கிரிக்கெட் தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், சட்டத்தரணி ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
IPL தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியான வருமான இழப்பு ஏற்படும் என்பதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடரை நிறுத்த வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.