
பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் சமுதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான விற்பனையில் 180 மில்லி லீற்றர் அதிகளவில் விற்பனையாகுகிறது. இதனால் அதிகளவில் சமூக விரோத செயற்பாடுகளும், சுற்றுபுற சூழலும் பாபரியளவில் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
நாள் கூலியாக வேலைக்குச் செல்பவர்களுக்கு அன்றாட தேவையாகவும் 180 மில்லி லீற்றர் மதுசார போத்தல்கள் காணப்படுகின்றன.
தனி சிகரெட் விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்ற யோசனையை 2019 ஆம் ஆண்டு அமைச்சரவையில் இரண்டு முறை முன்வைத்தோம். ஆனால் எவ்வித முன்னேற்றகரமான தீர்மானங்களும் கிடைக்கப் பெறவில்லை. மதுபானம், புகைத்தல் ஆகியவற்றுக்கான வரி அதிகரிக்கப்பட வேண்டும்.
இவ்விரு விடயங்களினால் அரசாங்கம் ஒருபுறம் அதிக வருவாயை ஈட்டினாலும், இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வருவாயை காட்டிலும் இரு மடங்கான நிதியை செலவிடுகிறது.
தனி சிகரெட் விற்பனை மற்றும், 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் விற்பனை ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை புதிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.
சாதகமான தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். அத்துடன் வெற்றிலைக்கூர் விற்பனை தொடர்பிலும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் புகைப்பிடிப்படவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.