டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் பேச்சுவார்த்தை!

டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் பேச்சுவார்த்தை!

அமெரிக்காவில் சீனாவின் டிக்டொக் செயலியைத் தடைசெய்ய ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவரும் நிலையில் அதனை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சீனாவின் ByteDance நிறுவனம், மைக்ரோசொப்ட், வெள்ளை மாளிகை பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் உடன்பாடு எட்டப்படும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சீன உரிமையின் காரணமாக ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்த செயலி ஏற்படுத்தக்கூடும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிக்டொக் செயலிக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆர்வம் காட்டிவரும் நிலையில் தடையை எதிர்கொள்வதிலும் பார்க்க அதனை விற்பனை செய்தல் என்ற நிலைக்கு பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக இந்த தடை அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்காவில் அந்நிய முதலீட்டிற்கான சக்திவாய்ந்த குழு அல்லது சிஃபியஸ் பைட் டான்ஸின் 2017ஆம் ஆண்டின் Musical.ly இனை வாங்குவதற்கு அமெரிக்கா ஆராய்ந்துவந்த நிலையில் அந்த நோக்கம் தற்போது டிக்டொக் நோக்கி நகர்ந்துள்ளது.

எனினும், டிக்டொக்கை வாங்குவதற்கான அணுகுமுறை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் அதனைக் கையகப்படுத்துவதில் மைக்ரோசொப்ட் வெற்றிபெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post