7 வயது குழந்தை கால்வாயில் கழுத்து கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; கலேவெல பகுதியில் சம்பவம்!

7 வயது குழந்தை கால்வாயில் கழுத்து கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; கலேவெல பகுதியில் சம்பவம்!

தாயின் அன்பை இழந்த, ஏழு வயது குழந்தையான சனுஜ என்பவர் மாத்தளை, கலேவெல - பத்கொலகொல்ல பகுதியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த வீட்டின் அயல் வீட்டு பெண்ணொருவர் குழந்தையை கடைசியாக பக்கத்தில் உள்ள கால்வாய் அருகே பார்த்ததாகவும், பின்னர் அவர் அங்கு காணப்படவில்லை,என பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குழந்தையின் சடலம் கால்வாயின் அருகே கண்டெடுக்கப்பட்ட பின்னர் இது கலேவல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸ் விசாரணையில் குழந்தையின் கழுத்து பகுதி ஒரு துணியால் நெறிக்கப்பட்டு, அவரது முகம் மணலால் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதேவேளை விசாரணைகளின் போது, இறந்த குழந்தை வசிக்கும் வீட்டின் முன் உள்ள கால்வாய் பகுதி போதைப்பொருள் பாவனையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹெராயின் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குப்பைகள் குழந்தையின் கொலை நடந்த இடத்திற்கு அருகிலும் காணப்பட்டன.

முதற்கட்ட விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (01) நடைபெறும்.

மேலும், இறந்த குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கலேவெல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post