தேர்தலுக்கு 2 கோடி பணத்தை மக்கள் மத்தியில் விநியோகித்த வேட்பாளர்!!

தேர்தலுக்கு 2 கோடி பணத்தை மக்கள் மத்தியில் விநியோகித்த வேட்பாளர்!!

பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்குகளை சேகரிப்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் தாள்களை வாக்காளர்களுக்கு விநியோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் இதுவரை வாக்காளர்களுக்கு 2 கோடி ரூபாயை வழங்கியிருப்பதாக தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு மையமான தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் (CMEV) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் களத்தில் இவ்வாறான சீரற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CMEVயின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இன்றும் அது அங்கீகரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post