
இதற்கமைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமானால்,குறித்த பாசடாலைகளில் அனைத்து மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பாடசாலைகளில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்சமயம் கொரோனா தொற்று குறைவடைந்து காணப்படும் நிலையில், குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
