
அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. பிரேமலால் ஜயசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் C. சந்திரகாந்தன் ஆகியோராவர்.
பிரேமலால் ஜயசேகரவுக்கு கடந்த ஜூலை மாதம் இரத்தினபுரி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், நாளை (19) பாராளுமன்ற தொடக்க அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், ஜயசேகர 104,237 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற ஆசனத்தை வென்றார், இரத்தினபுரி விருப்ப வாக்குகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளையானுக்கு நேற்று உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.
இவர் 2005 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தேவாலயத்தில் கிறிஸ்மஸ் மாஸின் போது ITAK எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறைவாசகம் அனுபவித்து வந்த நிலையில் இவர் 54,198 வாக்குகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் இருவரும் சிறைச்சாலை வண்டியில் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, அமர்வுகளின் முடிவில் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.