
லக்விஜய நிலையத்தில் இருந்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் முற்றாக இல்லாது போயுள்ளதென அவர் கூறினார்.
நுரைச்சோலை மின்நிலையத்தில் செயலிழந்துள்ள தானியங்கி குளிரூட்டும் கட்டமைப்பை சீர்செய்ய மின் உற்பத்தியை வழமை நிலைக்கு கொண்டுவர நான்கு நாட்கள் செல்லும் என மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தினம் ஒரு மணித்தியாலம் இரவு நேரத்திலும் காலை நேரம் 2 மணித்தியாலம் வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.