2021 இலிருந்து தரம் ஒன்று மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு!

2021 இலிருந்து தரம் ஒன்று மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு!

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஒன்றில் சேர்க்கை மாணவர்களின் எண்ணிக்கையை 40 அதிகரிப்பதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் திணைக்களம், கல்வி அமைச்சிற்கு வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சினால் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெருமவின் அறிவுறுத்தலுக்கு அமைய இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதானிகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அறிவித்துள்ளார்.

அதன்படி தரம் ஒன்றிற்கு ஆசிரிய உதவியாளர்கள் 02 பேர் நியமிக்கப்படுவார்கள் என்பதோடு, தரம் 03, 04, 05 களுக்கு தலா ஒருவர் வீதம் நியமிக்கப்படுவார்கள். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post