தேர்தல் விதிமுறைகளை மீறும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பலீல் மர்ஜான் - பிரதான வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்!

தேர்தல் விதிமுறைகளை மீறும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பலீல் மர்ஜான் - பிரதான வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்!

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தேர்தல்விதிமுறைகளை கண்மூடித்தனமாக மீறுகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிடம் கபே இது தொடர்பில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளது.
$ads={1}
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுததாபனத்தின் முஸ்லீம்சேவை அமைதிக்காலத்தில் தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுகின்றது என தெரிவித்துள்ளது.

அமைதிக்காலத்தில் எந்த தேர்தல் பிரச்சாரத்தையும் முன்னெடுக்ககூடாது என்றபோதிலும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் குருநாகல் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கோரும் பொதுஜனபெரமுனவின் பேருவளை அமைப்பாளர் மர்ஜான் பலீலின் குரல்மூல வேண்டுகோளை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஒலிபரப்பியுள்ளது என கபே தெரிவித்துள்ளது.
$ads={2}
இது பொதுச்சொத்தினை துஸ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை,இந்த தேர்தலில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தேர்தல்விதிமுறைகளை மீறியது இது முதல்தடவையல்ல ஏற்கனவே நாங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம் என கபே தெரிவித்துள்ளது.

அமைதிக்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கபே தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post