இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி!! -100 இற்கும் அதிகமானோருடன் தொடர்பு!!

இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி!! -100 இற்கும் அதிகமானோருடன் தொடர்பு!!

பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த லங்காபுர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் புதிதாக நேற்று ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவருடன் 19 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த அனைவரும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
$ads={1}
குறித்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக PCR பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

அந்த பாதுகாப்பு அதிகாரியின் மனைவி மற்றும் மகளுக்கு தற்போது PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post