தேர்தல் தினத்தில் கொரோனா பரவாது, அதற்கு நான் உத்தரவாதம்! -அனில் ஜாசிங்க

தேர்தல் தினத்தில் கொரோனா பரவாது, அதற்கு நான் உத்தரவாதம்! -அனில் ஜாசிங்க

சுகாதார பாதுகாப்பு அம்சங்களை பொது மக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஜனநாயகத்தை செயற்படுத்துவதுடன், கொவிட்-19 வைரஸ் பரவலையும் வெற்றிக் கொள்வது எமது பிரதான இலக்கு என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள வாக்களார்கள் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதேநேரம் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பதற்கான விசேட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
$ads={1}
வாக்களிப்பின் போது கொவிட்-19 வைரஸ் ஒருபோதும் பரவலடையாது என்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் முழுமையான உத்தரவாதம் வழங்குகிறேன்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உரிய காலத்தில் நடைப்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6 மாத காலமாக முன்னெடுத்த கடினமான செயற்பாடுகளின் காரணமாக பொதுத்தேர்தலை நாளை மறுதினம் நடத்துவதற்கான பாதுகாப்பான சூழல் தோற்றம் பெற்றது.

புதிய முறையில் தேர்தலை நடத்தும் நிலை காணப்படுகிறது. கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளியை பேணுதல் மற்றும் அடிக்கடி கைகழுவுதல் ஆகிய சுகாதார பாதுகாப்பு அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்டன, இவையனைத்தும் இடம்பெறவுள்ள தேர்தலின் போது செயற்படுத்தப்படும்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான சூழலை மத்திய நிலையங்களில் ஏற்படுத்திக் கொடுக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எமது கோரிக்கையிலுள்ள சட்ட சிக்கலை சட்டமா அதிபர் தெளிவுப்பபடுத்தினார், ஆகையால் 14 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இம்முறை வாக்களிக்க முடியாது.

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபபட்டுள்ள வாக்காளர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வெளியெறி வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்ப்படுத்தலுக்கு உட்படுத்தபபட்டுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

இவர்கள் பிரத்தியேக வாகனங்களில் மாத்திரம் வாக்களிப்பு நிலையங்களுக்கு மாலை 4.00 மணிக்கு பிறகு செல்ல வேண்டும்.

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இவர்களை கண்காணிக்க 2 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில் ஈடுப்படுவாரகள். இவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாக்குப்பெட்டி ஒதுக்கபட்டிருக்கும்.

இவர்கள் கொவிட்-19 வைரஸ் நோயாளிகள் அல்ல. பிற வாக்காளர்களின் அச்சத்தை போக்கவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதியில் 1,200 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று பரிசோதனையின் பெறுபேறுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே கொவிட்-19 வைரஸ் தொடர்பில் வாக்காளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் சுதந்திரமான முறையில் சுகாதர பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பின்பற்றி வாக்களியுங்கள்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு மையங்களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் 8,000 பேர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுப்படுத்தப்படவுள்ளார்கள் என்றார்.
$ads={2}
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.