பஸ் வண்டிகளில் பயணிகளுடன் எரிபொருள் நிரப்பினால் சட்ட நடவடிக்கை!

பஸ் வண்டிகளில் பயணிகளுடன் எரிபொருள் நிரப்பினால் சட்ட நடவடிக்கை!

தனியார் பஸ்களுக்கு தேவையான எரிபொருள்களை முன்கூட்டியே நிரப்பிக்கொள்ளாது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று, எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பஸ்ஸை நிறுத்தி எரிபொருள் நிரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலேயே இந்த சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் அவ்வாறான தனியார் பஸ் சேவையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு நாளாந்தம் தேவைப்படும் எரி​பொருளை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். அது பணியாளர்களின் பொறுப்பாகும்.

அவ்வாறு இல்லாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு பயணிகளுடன் பஸ்களை செலுத்திச் செல்வது அபாயகரமானது என்பதுடன் ஆபத்தானது எனவும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post