வாகனங்களின் விலை ஒரு மில்லியனால் அதிகரிப்பு!

வாகனங்களின் விலை ஒரு மில்லியனால் அதிகரிப்பு!

வாகன இறக்குமதியாளர்கள் அடுத்த 06 மாதங்களுக்கு போதுமான வாகனங்களை மாத்திரமே தம்மிடம் வைத்திருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது

2020 மார்ச் 19 முதல் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கு தடையினை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைச் செயலாளர் பிரசாத் குலதுங்கா கூறினார்.

இதன் விளைவாக, பதிவு செய்யப்படாத வாகனங்களின் விலை ரூ. 1 மில்லியன் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையும் மதிப்பிடப்பட்டபடி அதிகரித்துள்ளது, என்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் P.B ஜயசுந்தர, தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கையிருப்பில் இருக்கும் வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானது என வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாகவே வாகன இறக்குமதியாளர் சங்கம் இந்த கருத்து தெரிவித்தது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post