"மதுமாதவ அரவிந்த கடந்த காலங்களில் பல இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார், இனவாத கருத்துக்களை மாத்திரமல்ல கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வன்முறையை தூண்டும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் இப்போது அவருக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சட்டத்தை செயல்படுத்த முடியும்." என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் இனவாதத்தை தூண்டியதாக நீதி அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.