இதுவரை கடும் தேர்தல் சட்டமீறல்கள் எதுவும் பதிவாகவில்லை! -பொலிஸ்

இதுவரை கடும் தேர்தல் சட்டமீறல்கள் எதுவும் பதிவாகவில்லை! -பொலிஸ்

கடந்த சில மணி நேரங்களில் எந்ததொரு பகுதிகளிலும் கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்

இன்று (05) தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"தேர்தல் நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

மக்களும் அமைதியான முறையில் எந்ததொரு இடையூறும் இன்றி வாக்களிப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post