நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் செயலாளர்களில் தமிழ் முஸ்லிம் இல்லை!

நாட்டின் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக, தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவர் மட்டுமேநியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் நீதியமைச்சராக சப்ரி அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
$ads={2}
இந்நிலையில், 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் அதில், தமிழ், முஸ்லிம் சார்பில் ஒருவர் கூடநியமிக்கப்படவில்லை.

இதேவேளை, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
$ads={1}

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஏற்கனவே பதவி வகித்த, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, தொடர்ந்தும்அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்களின் விபரங்கள் வருமாறு
 1. டப்ளிவ்.எம்.டீ.ஜே. பிரனாந்து - அமைச்சரவையின் செயலாளர்
 2. ஆர்.டப்ளிவ்.ஆர். பிரேமசிரி - பெருந்தெருக்கல் அமைச்சு
 3. எஸ்.ஆர். ஆட்டிகல - நிதியமைச்சு
 4. ஜே.ஜே. ரத்னசிறி - அரச சேவை, மாகாண உள்ளூராட்சி அமைச்சு
 5. ஜகத் பீ. விஜேவீர - ஊடக அமைச்சு
 6. ரவிந்ர ஹேவாவிதாரண - பெருந்தோட்ட அமைச்சு
 7. அநுர திசாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு
 8. டப்ளிவ்.ஏ. சூழானந்த - கைத்தொழில் அமைச்சு
 9. வசன்தா பெரேரா - மின்வலு அமைச்சு
 10. எஸ். ஹெட்டியாராச்சி - சுற்றுலா அமைச்சு
 11. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க - காணி அமைச்சு
 12. என்.பீ.டீ.யூ.கே. மாபா பதிரண - தொழில் அமைச்சு
 13. ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - மீன்பிடி அமைச்சு
 14. மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு
 15. எம்.கே.பீ. ஹரிச்சந்திர - வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
 16. என்.பீ. மொண்டி ரணதுங்க- போக்குவரத்து அமைச்சு
 17. கலாநிதி பிரியன் பந்து விக்கிரம - நீர்வழங்கல் அமைச்சு
 18. ஜே.எம்.பீ. ஜயவர்த்தன -வியாபார அமைச்சு
 19. மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க - சுகாதார அமைச்சு
 20. மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஏ.கே. சுமேத பெரேரா - விவசாய அமைச்சு
 21. அனுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
 22. கே.டீ.ஆர். ஒல்கா - வலுச்சக்தி அமைச்சு
 23. அத்மிரால் (ஓய்வு) ஜயனாத் கொழம்பகே - வெளிநாட்டு அமைச்சு
 24. வைத்தியர் அனில் ஜாசிங்க- சுற்றாடல் அமைச்சு
 25. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு
 26. சிரிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post