ஐ. தே. கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பில் சிரிகொத்தவில் பரபரப்பு!

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு சிறி;கொத்த கட்சி தலைமையகத்தில் தற்போது கூடியுள்ளது.

கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூடியுள்ளது. கட்சி தலைமைத்துவம்மற்றும்தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக இதன் போது இறுதி தீர்மானம் எட்டப்படுமென அறிவிக்கப்பட்டது.

$ads={1}
கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் இறுதிதீர்மானங்கள் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சிரேஷ்ட அங்கத்தவர்கள் நேற்றைய தினத்திலும் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் ஒன்று கூடியபோதிலும் இறுதி தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.
$ads={2}

எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்த அச்சந்திப்பு இடம்பெற்று 24 மணி நேரம் செல்லும் முன்னர் இன்றும் இக்கூட்டம்நடாத்தப்பட்டுள்ளது.

இதன் போது கட்சி தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதி தீர்மானம் எட்ட முடியாது விட்டால் கட்சியின்உட்பூசல்கள் மேலும் உக்கிரமடையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்துதெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post