
குறித்த நான்கு பேரையும் இன்று (04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, காவல்துறை விசாரணை குழுவில் நேற்று முன்தினம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் நேற்று மதியம் வரை வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
அதன்பின்னர் நேற்று பிற்பகல் கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ.குணதாச முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கு நேற்று பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படும் போது அனுருத்த சாம்பயோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரியிருந்தார்.
பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு அரசாங்க பிரதி மன்றாடியார் நாயகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.